முகப்பு Cinema இமைக்கா நொடிகள் பட தயாரிப்பாளருக்கு கைக்கொடுத்த நயன்தாரா

இமைக்கா நொடிகள் பட தயாரிப்பாளருக்கு கைக்கொடுத்த நயன்தாரா

இமைக்கா நொடிகள் பட தயாரிப்பாளருக்கு கைக்கொடுத்த நயன்தாரா

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நம்பர் 1 கதாநாயகியாக வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவரின் நடிப்பில் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

எனினும் இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது அப்படத்தின் தயாரிப்பாளருக்கு சிக்கல் எழுந்துள்ளதோடு, படத்தை ரிலீஸ் செய்வதற்கு முடியாமல் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதன் போது நயன்தாராவுக்கு 50 லட்சம் சம்பள பாக்கி இருந்து இருந்த நிலையில், நயன்தாரா நினைத்திருந்தால் அதை அப்போது கேட்டு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் நயன்தாரா தயாரிப்பாளரின் நிலையை எண்ணி அந்த சம்பளத்தை கேட்காமல் விட்டுக் கொடுத்தாராம்.

இந்த செய்தி தமிழ் சினிமாவில் பரவ நயன்தாராவுக்கு பாராட்டு மழை குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com