‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

‘இமைக்கா நொடிகள்’ படத்தின் ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகின்றார்.

ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான இதில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாராவும், நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

பொலிவுட் நடிகரும், இயக்குநருமான அனுராக் காஷ்யப் இப்படத்தின் மூலம் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்தின் டிரைலரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், இப்படம் வருகிற 30-ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]