‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் சென்சார் ரிசல்ட் தற்போது வெளியீடு

‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தின் சென்சார் ரிசல்ட் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷிகண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வருகின்றது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா, நயன்தாரா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் அதர்வாவுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதோடு, மேலும் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.

படத்தை பார்த்த குழுவினர் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]