இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் பனிப்பொழிவு நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிற நிலையில், இம்மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

இதனால் பல பகுதிகளில் வெள்ளத்தில் கார், லொரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

அத்தோடு, நிலச்சரிவால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக அரசு மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மேலும் அணைகளில் இருந்து ஆறுகளில் அதிகப்படியான நீர் திறந்துவிடப்படும் என்பதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசத்தில் இமாச்சல பிரதேசத்தில் இமாச்சல பிரதேசத்தில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]