இமாச்சலப்பிரதேச பஸ் விபத்தில் 26 மாணவர்கள் பலி

இமாச்சலப்பிரதேச பஸ்

மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பாடசாலை பஸ் விபத்துக்குள்ளானதில் 26க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாணவர்களை ஏற்றிச்சென்ற தனியார் பாடசாலை பஸ் இமாச்சலப்பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் மலைப்பாங்கான சாலையில் செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வீதியின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து குறித்த தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான பஸ்ஸை கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 9 மாணவர்கள் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும், காயமடைந்த 25க்கும் அதிகமான மாணவர்கள் அருகிலுள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

காயமடைந்த மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில மந்திரி பின்னர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.