நாளை இமயமலைப் பயணத்தை தொடங்கவுள்ள ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நாளை தனது இமயமலைப் பயணத்தை தொடங்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

தனது மன்றத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி, தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் ‘காலா’, ‘2.0’ ஆகிய படங்களின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]