இப்படி எல்லாம் செய்யும் பெண்களை கண்டாலே ஆண்களுக்கு பிடிக்காதாம்!

பெண்களுக்கு ஆண்களுக்கும் இடையே இயற்கையாகவே ஈர்ப்பு இருந்தாலும், பெண்கள் செய்யும் ஒரு சில விஷயங்கள் ஆண்களுக்கு பிடிப்பதில்லை. அவ்வாறாக உள்ள பெண்களிடம் ஆண்கள் சற்று தள்ளியே இருக்கின்றார்கள். அப்படி பெண்கள் செய்யும் எந்த விஷயங்கள் ஆண்களுக்கு பிடிப்பதில்லை என்பதை காண்போம்.

சில பெண்கள் பேஷன் என்ற பெயரில் தங்களது தலைமுடியை கலைத்து விட்டு கொண்டு சிக்குகள் விழுந்து இருப்பது ஆண்களுக்கு பிடிப்பதில்லையாம். தலைமுடியை சுத்தமாக வைத்திருக்கும் பெண்களை தான் ஆண்களுக்கு பிடிக்கிறதாம்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை மறைக்க நீங்கள் அதிகமாக பவுண்டேசன் க்ரீம்களை உபயோகித்து மேக்கப் போடுவது ஆண்களுக்கு பிடிக்காதாம்.

நேர்த்தியாக கண்களுக்கு மேக்கப் செய்தால் நன்றாக இருக்கும். உங்களுக்கு சரியாக தெரியால் அதிகமாக கண்களுக்கு மேக்கப் போடுவது ஆண்களை வெறுக்க வைக்கும்.

கண்ணுக்கு மை அழகு தான். ஆனால் நீங்கள் தரமற்ற கண்மைகளை பயன்படுத்தவில்லை என்றால் அது அழகை சீரழித்துவிடும். திட்டு திட்டாக தெரியும் கண்மைகள் அழகாக இருக்காது.

உங்கள் நிறத்திற்கு ஏற்றது போல லிப்ஸ்டிக் போடுங்கள். அடர்த்தியான நிறங்களில் அதிகமாக லிப்ஸ்டிக் போடுவது ஆண்களுக்கு பிடிக்காது.

மிதமான வாசனையை தரும் வாசனை திரவியங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அளவுக்கு அதிகமான வாசனைத் திரவங்களைப் பயன்படுத்துவது அருகில் இருப்பவருக்கு அசௌகரியத்தைக் கொடுக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]