இப்படியொரு இடம் நம்ம த்ரிஷாவுக்கா! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

இப்படியொரு இடம் நம்ம த்ரிஷாவுக்கா ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

த்ரிஷாவுக்கா

நடிகை த்ரிஷாவுக்கு யூனிசெப் அமைப்பில் குழந்தைகளுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் பதவி அண்மையில் கிடைத்தது.

இந்த பதவியின் மூலம் நடிகை த்ரிஷா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள குழந்தைகளின் உரிமைகள், சுகாதாரம், கல்வி, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன் கொடுமை ஏற்படாத வகையில் தடுத்தல் ஆகியவற்றுக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் வங்கி பணியாளர்கள் தேர்வு எழுதுபவர்களுக்கான தகவல் புத்தகத்தில் இவருக்குக் கிடைத்த இந்த பதவி குறித்த குறிப்பு பதிவாகியுள்ளது.

மேலும் இந்த பதவியை பெறும் முதல் தென்னிந்திய நடிகை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை நடிகை த்ரிஷாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இது த்ரிஷாவுக்கு கிடைத்த மேலும் கெளரவமாகவே பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]