இப்படியும் ஒரு காதலியா?? காதலனுக்காக டவர் மீது ஏறி போராட்டம் – ஹைதராபாத்தில் சம்பவம்

ஹைதராபாத்திற்கு அருகே யாதகிரி போங்கிர் மாவட்டம், வல்லிகொண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷ்ருதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர்.

ஒரே கல்லூரியில் படித்தபோது, நட்பு ஏற்பட்டு பின் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் கடந்த சில நாட்களாக பாஸ்கர் தன்னை தவிர்த்துவிட்டு வேறு பெண்ணுடன் பழகி வருவதாக குற்றம்சாட்டிய ஷ்ருதி, தன்னை திருமணம் செய்யக்கோரி பாஸ்கர் வீட்டு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஊரை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெள்ளிகொண்டாவில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட ஷ்ருதி, பாஸ்கர் தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் குதித்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், 3 மணி நேரம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]