இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் அரை நிர்வாண படத்தை வெளியிட்டாா் – மைக்கேல் ஜாக்சனின் மகள்

மைக்கேல் ஜாக்சனின் மகள்

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தன்னை பின்தொடரும் 14 லட்சம் பின்தொடர்பாளர்களுக்கு, ‘நிர்வாணம் என்பது இயற்கையானது’ என்றும், ‘நாம் அனைவரும் மனிதர்கள் என்பதன் ஒரு பகுதிதான் நிர்வாணம்’ என்றும் மறைந்த பிரபல பாப் இசைப்பாடகரான மைக்கேல் ஜாக்சனின் மகளான பாரீஸ் ஜாக்சன் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் ஒரே மகளும், மாடல் அழகியுமான பாரீஸ் ஜாக்சன், தனது நாயுடன் மேலாடை ஏதுமின்றி சூரிய வெளிச்சத்தில் படுத்தவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்ததால் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார்.இன்ஸ்டாகிராம்

வண்டு வடிவில் இருந்த இரண்டு எமோஜிகளை (சமூகவலைதளத்தில் முகபாவனைகள் மற்றும் உணர்ச்சிகளை பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் வடிவங்கள்) கொண்டு தனது மார்பக காம்புகளை மறைத்தவாறு இருந்த நிலையில் பாரிஸ் ஜாக்சன் புகைப்பட போஸ் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு பின்னர் நீக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால், 19 வயதான பாரீஸ் கருப்பு வெள்ளை புகைப்பட பாணியில், மேலாடையின்றி புகைப்பிடித்தவாறு தனது மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டார். இப்புகைப்படத்துடன் தனது விமர்சகர்களை தாக்கும் வகையில் ஒரு நீண்ட வாசகத்தையும் அவர் இணைத்திருந்தார்.
இயற்கை வழியில் மீண்டும் திரும்பும் விதமாக நிர்வாணம் ஓர் இயக்கமாக தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட பாரீஸ், நிர்வாணத்தை ஒரு தத்துவம் என்றும் வர்ணித்துள்ளார்.

தன்னை இவ்வுலகுடன் தொடர்பு கொள்ள நிர்வாணம் உதவுகிறது என்றும், அழகியல் விஷயமான நிர்வாணத்தை பாலியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது என்றும் பாரீஸ் ஜாக்சன் மேலும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]