முகப்பு News Local News இன்றைய காலநிலை- பிற்பகல் வேளையில் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றைய காலநிலை- பிற்பகல் வேளையில் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்

இன்றைய தினம் இலங்கைக்கு சூரியன் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் 12.00 மணியளவில் கோண்டாவில் மற்றும் நாவற்காடு போன்ற பகுதிகளுக்கு சூரியன் உச்சம் கொடுப்பதாக வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.

இதேவேளை ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதனுடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும்.

மேலும் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com