இன்று 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் வன்முறை வெடிக்கலாம் -அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை?

பிரதமரின் வதிவிடமான அலரி மாளிகைக்கு அருகே இன்று, நண்பகல் 12 மணிக்கு பாரிய எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை கூட்டாமல் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று புதிய அமைச்சரவை பதவி பிரமாணம் செய்து கொண்டது.

இந்நிலையில் அரசியல் சாசனத்துக்கு முரணான இந்த நடவடிக்கையை கண்டிக்கும் நோக்கில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வன்முறைகள் தலைதூக்க கூடும் என்பதால் ஆர்ப்பாட்டங்கள், நடைபெறும், மற்றும், பெரியளவில் கூட்டங்கள் நடக்கும், இடங்களில் இருந்து விலகி, கவனமாக இருக்குமாறு அமெரிக்கக் குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]