இன்று முதல் மீண்டும் லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்

lottery tickets

இன்று முதல் மீண்டும் லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்

லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை நாளை முதல் இடை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக லொத்தர் சீட்டு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடம் முதல் லொத்தர் சீட்டு ஒன்றின் விலை 30 ரூபாவாக அறவிடப்படும் என அரசாங்கம் முன்மொழிந்திருந்தது.
குறித்த முன்மொழிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே லொத்தர் சீட்டு விற்பனை செய்வதை நாளை முதல் இடை நிறுத்த உள்ளதாக தேசிய லொத்தர் சபை சங்கம் இன்று அறிவித்துள்ளது.