இன்று முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றங்கள் – பி. வியானி குணதிலக்க

இன்று முதல் தேசிய அடையாள அட்டையில் மாற்றங்கள் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்தார்.

புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திலான நிழற்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.இன்று முதல்

குறித்த நிழற்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆலோசனைகளை பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும், கிராம உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

மேலதிக விபரங்களை எமது ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் காணலாம் எனவும் தெரிவித்தார்.

எங்களின் அனுமதி பெற்ற புகைப்பட நிலையங்களில் எங்களின் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

புது தேசிய அடையாள அட்டையானது ஸ்மார்ட் அடையாள அட்டை போன்றுள்ளதாகவும், அவ் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் அந்நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம், இரத்த வகை போன்றன உள்ளடக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]