இன்று முதல் தேங்காய்யொன்றை 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும்

coconut 10 இலட்சம் தேங்காய்களை இன்று சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இந்த தேங்காய்களை விநியோகிக்கவுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கபில யகன்தாவல குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 65 ரூபாவிற்கு தேங்காய்யொன்றை நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் நிலவிய வறட்சி காரணமாக தேங்காய் உற்பத்தி வீழச்சியடைந்தது.

இதன் காரணமாக தேங்காய் ஒன்றின் விலை 80 தொடக்கம் 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

எனினும் சில பகுதிகளில் 100 ரூபாவிற்கும் அதிக விலையில் தேங்காய் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.coconut

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]