இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசாங்க தாதியர்கள்

அரசாங்க தாதியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை அடையாள வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 7.00 மணி முதல் இரண்டு நாட்களுக்கு இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஐக்கிய தாதியர் சேவை ஒன்றியத்தின் தலைவர் முருத்தெட்டுவ ஆனந்த தேரர் அறிவித்திருந்தார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, டி சொய்சா வைத்தியசாலையின் பெண்கள் மற்றும் விசேட பிரிவு, அதிதீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றில் இந்த அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதில்லை என தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]