இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது புதிய தேசிய வருமான வரி சட்டம்

புதிய தேசிய வருமான வரி சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்ற நிலையில், இலங்கையின் வரிமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொருளாதார நிவுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த திருத்தத்தின் மூலம் புதிய வரிமுறைகளும் அறிமுகம் செய்யப்படுவதுடன், பல துறைகள் சார்ந்த வரிமுறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வரி தொடர்பான ஆவணம் ஒன்று பேணப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வரி சட்ட திருத்தம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் மீள் திருத்தங்கள் செய்யப்பட்டு, செப்டெம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, இந்த புதிய வரிகள் தொடர்பான சட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவொன்று என, முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஊடகங்களுக்கு நேற்று தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]