இன்று மீண்டும் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில்

இன்று இரவு 8 மணிமுதல் நாளை காலை 5 மணிமுதல் அமுலில் இருக்கும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை மிகவும் பொறுப்புடன் கையாளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக அங்கு வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், கண்டியின் முக்கிய நகர்ப்பகுதிகளில் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு செயற்படுவது தொடர்பில் வெளிநாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது தமது கடவுச்சீட்டை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என இலங்கை சுற்றுலா சபை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பில் ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் கண்டி மாவட்டத்திற்குள் மாத்திரே வெளிநாட்டவர்கள் இந்த நடைமுறையை பின்னபற்ற முடியும் என இலங்கை சுற்றுலா சபை மேலும் அறிவுறுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]