இன்று மாறுகிறது அமைச்சரவை?

இன்றைய தினம் அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறும் என்று அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமைச்சர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து அமைச்சரவையில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்ந்து பிற்போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று அதிகாலை 3.00 மணியளவில் கட்டார் நோக்கிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர இன்னும் சில அமைச்சர்கள் இன்று மாலை வௌிநாடு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.