இன்று பிற்பகல் நாட்டின் வானிலையில் மாற்றம்

இன்று பிற்பகல் 2 மணியின் பின் நாட்டின பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிரதேசங்கள் சற்று கொந்தளிப்பாக காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]