இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை சார்ந்த வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் நடத்தப்படுவது என்பன இன்று(2) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் தொடர்பாக அச்சிடப்பட்ட ஆவணங்கள் விநியோகம், சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள், அச்சு ஊடகங்களின் வெளியீடுகள் தொடர்பானவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு

இந்த விதிமுறைகளுக்கு எதிராகச் செயற்படும் நிறுவனம் அல்லது நபர் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனப் பொலிஸாருக்குப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில், பொலிஸ் நிலையத்தின் அவசர இலக்கம் 119, பரீட்சைகள் திணைக்களத்தின் விரைவு தொலைப்பேசி இலக்கம் 1911 அல்லது 0112 784 208 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கும் முறைப்பாட்டை முன்வைக்க முடியுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]