இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் 10ரூபாவால் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய கட்டண சீர்த்திருத்திற்கு அமைய முதலாவது கிலோ மீற்றருக்காக தற்போது அறவிடப்படும் 60 ரூபா என்ற கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கிலோ மீற்றருக்காக அறவிடப்படும் 40 ரூபா என்ற கட்டணம் 50 ரூபாவாக 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]