இன்று நள்ளிரவு முதல் சிகரெட் விலை உயர்வு!!!

சிகரெட் மீதான வரியை மேலும் உயர்த்தி உயர்த்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நள்ளிரவு முல் சிகரெட் விலை மேலும் உயருகிறது.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று டெல்லியில் நடந்தது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சென்னையில் இருந்தபடியே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் அருண் ஜேட்லி கூறுகையில்,

சிகரெட் மீதான வரி 28 சதவீதம் உயர்த்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகரெட் விலை நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.

இந்த வரி உயர்வால் அரசுக்கு ரூ. 5000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். அடுத்த ஜி.எஸ்.டி.ஆய்வு கூட்டம் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கூடும் எனவும் தெரிவித்தார்.

Open pack of cigarettes

இந்த விலை உயர்வால் 65 மி.மீ அளவுள்ள ஆயிரம் சிகரெட் கொண்ட பண்டல் ஒன்றுக்கு ரூ.485 உயருகிறது. 65 மி.மீக்கும் மேல் அளவுள்ள ஆயிரம் சிகரெட் கொண்ட பண்டல் ஒன்றுக்கு 792 ரூபாய் உயர்த்தப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]