இன்று கூடும் ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழுவில் விஜேதாஸவின் பதவி குறித்து இறுதித் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று ஒரு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குறித்த விசாரணை அறிக்கை இதன்போது சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐ.தே.கவின் செயற்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இதன்போது நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிங்ரமசிங்க, கபீர் ஹாசீம் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைசெய்து இன்று திங்கட்கிழமை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் உத்தரவிடப்பட்டிருந்தது. குறித்த குழுவால் மூன்று நாட்களாக விசாரணை செய்யப்பட்ட அறிக்கை இன்றை நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

என்றாலும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தவறான கருத்துகளை பதியவில்லை. கட்சி, நிறங்களைவிட நாடுதான் முக்கியம். எனது அமைச்சுப் பதவி குறித்து ஜனாதிபதியால் இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்று விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விஜேதாஸ ராஜபக்ஷ கட்டாயம் இராஜனாமா செய்வார் என்று பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]