முகப்பு News Local News இன்று காலை முதல் வழமை போன்று தொடரூந்து சேவை

இன்று காலை முதல் வழமை போன்று தொடரூந்து சேவை

தொடரூந்து பணியாளர்களால் கடந்த நான்கு தினங்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு நேற்றைய தினம் கைவிடப்பட்ட நிலையில், இன்று காலை முதல் வழமை போன்று தொடரூந்து சேவைகள் இடம்பெறுவதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை முதல் வழமையான நேர அட்டவணைப்படி அனைத்து தொடரூந்து சேவைகளும் இடம்பெறும் என தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் அனைத்து அஞ்சல் தொடரூந்து சேவைகளும் நேற்று நள்ளிரவு முதல் நேர அட்டவணைப்படி இடம்பெறுகிறது.

வேதன முரண்பாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தொடரூந்து பணிப்புறக்கணிப்பு, நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com