இன்று காலை கூடுகிறது நாடாளுமன்றம்

வரவுசெலவுத்திட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில், பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்றம் இன்று காலை கூடும் என்று நேற்று முன்தினம் சபாநாயகர் அறி்வித்திருந்தார்.

இன்று காலை சபையின் சிறப்பு அமர்வு கூடவுள்ளது. இந்த அமர்வில், பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை, உறுப்பினர்களுக்கு கையளிக்கப்படும்.