இன்று காலை இடம்பெற்ற வாகனவிபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாப பலி

பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தெய்யன்தர, ஹக்மன வீதியின் பிட்டவல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பேருந்து ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் இருவரும் நரவெல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தெனகம பிரதேசத்தை சேர்ந்த சந்தருவருன் என்ற 16 வயதுடைய மாணவனும், இந்திரஜித் குமார என்ற 19 வயதுடைய மாணவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் சடலம் வரவெல்பிட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]