இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி!

கோட்டை – மஹல்வராவ பிரதேசத்தில் இன்று காலை அரச பேருந்துடன் ஜீப் ரக வாகனமொன்று மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஜீப் ரக வாகன சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மீகொடை – பனாலுவ பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]