இன்று ஏமாற்றத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள்இந்த முறை தீபாவளி பண்டிகையை மிகவும் ஏமாற்றத்துடன் கொண்டாடவுள்ளதாக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவலை வௌியிட்டுள்ளனர்.

கடந்த வருடம் 10 ஆயிரம் ருபா தீபாவளி முற்பணம் வழங்கப்படவேண்டும் என கோரி பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பல தடவை ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

பின்னர் தோட்ட நிர்வாகங்கள் முதல் கட்டமாக 6500 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 3500 ரூபாடன் மொத்தமாக 10 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்தன.

இத்தொகையை பெற்றுக்கொள்ள மலையக அரசியல்வாதிகள் பல்வேறுப்பட்ட வகையில் அழுத்தம் கொடுத்தனர்.

இம்முறை தீபாவளி முற்பணம் தொடர்பாக மலையக அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் இறுதிவரை கணக்கில் கொள்ளவில்லையென தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, கடந்த வருடம் வழங்கப்பட்ட 10 ஆயிரம் ருபா முற்பணத்தினை கூட தொழிலாளர்களுக்கு சரியாக பெற்றுக்கொடுக்க முடியாத அளவிற்கு மலையக தலைமைகள் இருக்கின்றமை குறித்து அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கப்படும்போது, இதனை கண்டுகொள்ளாமல் தொழிற்சங்க தலைவர்கள் இருப்பதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]