இன்று இரவு இடம்பெறபோகும் அரசியல் பெரும் திருப்புமுனை- அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு??

நாடாளுமன்றை நள்ளிரவுடன் கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று பரவிய செய்தியால் கொழும்பு அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தின் அடிப்படையில் நாடாளுமன்றின் முதலாவது அமர்விலிருந்து 4 ஆண்டுகளும் 6 மாதங்களும் கடந்த பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும். அதனடிப்படையில் நடப்பு நாடாளுமன்றை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஜனாதிபதி கலைக்க முடியும்.

எனினும் நாட்டில் தற்போது ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி நாடாளுமன்றை இன்று நள்ளிரவுடன் கலைக்கும் தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என்ற செய்தி தீயாகப் பரவுவதால் அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை உரிய காலத்திற்கு முன்னரே கலைக்க திட்டமிட்டமிட்டுள்ளார். இந்தச் செயலானது அரசியலமைப்பு மீறலாகும்” என்று தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, இந்நிகழ்வானது இன்று நள்ளிரவே நடைமுறைப்படுத்தக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]