இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே

இன்று காலை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வன்மையாக கண்டிப்பதாக விஷேட ஒலிப்பதிவு ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இந்த சம்பவம் தொடர்பில் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த சதித்திட்டம் தொடர்பில் விசாரணை செய்த அனைத்து பாதுகாப்பு பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் துயரமான சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ள பின்னணியில் மக்கள் அமைதி காக்கும் அதேவேளை, விசாரணைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்குமாறும் இந்த சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]