இன்று ஆரம்பிக்கிறது நல்லூர்த் திருவிழா

இன்று ஆரம்பிக்கிறதுவரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழா, நாளை (28) காலை 10 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில், 6ஆம் திகதி மாலை மஞ்சத்திருவிழாவும், 12ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 15ஆம் திகதி காலை சூர்யோற்சவமும், அன்று மாலை கார்த்திகை உற்சவமும், 16ஆம் திகதி சந்தானகோபலர் உற்சவமும், அன்றைய தினம் மாலை கைலாசவாகனத் திருவிழாவும், 17ஆம் திகதி காலை கஜவல்லி – மஹாவல்லி உற்சவமும், அன்றைய தினம் மாலை வேல்விமான (தங்கரதம்) உற்சவமும், 18ஆம் திகதி திங்கட்கிழமை காலை தண்டாயுதபாணி உற்சவமும், அன்றைய தினம் மாலை ஒருமுக உற்சவமும், 19ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், 20ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், 21ஆம் திகதி காலை தீர்த்தத்திருவிழாவும், 22ஆம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]