இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6பேர் பலி- நயன்மடம பிரதேசத்தில் சம்பவம்

வென்னப்புவ – நயன்மடம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 03.15 மணியளவில் சிற்றூந்து ஒன்று பாரவூர்தி ஒன்றின் பின்புறமாக மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றுமொருவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]