இன்றும் தொடர்கிறது போராட்டம்

                              இன்றும் தொடர்கிறது போராட்டம்

போராட்டம்

ரயில் தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் ஆரம்பித்த வேலை நிறுத்த போராட்டத்தில், நேற்று நள்ளிரவு முதல் ரயில் காப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட மேலும் சில குழுக்களும் இணைந்து கொண்டுள்ளன.

இது தொடர்பாக நேற்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, இன்றும் போராட்டம் தொடர்கின்றது.

ஜனாதிபதி அல்லது பிரதமர் உறுதிமொழி வழங்கும் வரையில் வேலை நிறுத்தத்தை தொடரப் போவதாக ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]