இன்றும் சபையில் பெரும்பான்மையை காட்ட ஐ.தே.க தீர்மானம்

மீண்டும் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை உறுதிப்படுத்தி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த புதன் மற்றும் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு அவை குரல் மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்போது கடும் மோதல் நிலைமையும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய தினமும் அதேபோன்று நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் பட்சத்தில் முறுகல் நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]