இன்புளுவென்சா பீ வைரஸ் தொடர்பில் அறிவுறுத்தல்

இன்புளுவென்சா பீ வைரஸ் தொடர்பில் அறிவுறுத்தல்

இன்புளுவென்சா பீ ரக வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதன் காரணமாக அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

வருடாந்தம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்புளுவென்சா பீ வைரஸ் தொற்றுக்கு இலக்காகி முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற 9 பேர் இறந்துள்ளமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

கடந்த சில மாதங்களில் அவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், 50 முதல் 70 வயதுடையைவர்களே உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வைரஸ் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் பாதிப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]