இன்புளுவன்சா வைரஸ் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது ; அரசுக்கு எச்சரிக்கை

இன்புளுவன்சா வைரஸ் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளது அதனால் அவசரநிலையை அறிவிக்கவேண்டும் என்ற வேண்டுகோள் அரச மருத்தவ அதிகாரிகள் சங்கத்திடமிருந்து வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சரை நோக்கியே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அலட்சியப்படுத்த முடியாத வேண்டுகோள் இது.

சையிட்டம் விவகாரத்தில் உறுதியாக நிற்கின்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அந்த விவகாரத்தில் அதேபோன்று உறுதியாக நிற்கின்ற அமைச்சரிடம் விடுத்துள்ள வேண்டுகோள் என்பதனால் இது காற்றில் பறக்கவிடப்படும் அபாயம் உள்ளளது.

ஆனால், அவ்வாறான அணுகுமுறையை மிகுந்த பொறுப்புள்ள அமைச்சர் என்ற வகையில் ராஜித சேனரத்தின தவிர்க்கவேண்டும்.

இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதை கருத்தில் எடுத்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேண்டுகோளில் உள்ள உண்மையை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடப்பாடு அமைச்சரிற்குள்ளது.

இது காலம் தாழ்த்துகின்ற விடயமுமல்ல –காலம் தாழ்த்தப்படும் ஓவ்வொரு நொடியும் யாராவது ஓருவர் இன்புளுவன்சாவினால் பாதிக்கப்படலாம். ஆகவே, இது விரைந்து நடவடிக்கை எடுக்கபடவேண்டிய விடயம்.

இந்த நோய் தொடர்பிலான இன்னொரு பாரிய நெருக்கடி குறித்தும் அரச மருத்து அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அது குறிப்பிட்ட இன்புளுவன்சாவை குணப்படுத்துவதற்கான மருந்து போதாமை தொடர்பானது.

இந்த வகை மருந்து போதியளவு இன்மையினால் நெருக்கடியை எதிர்கொள்கின்றோம் இதனை அரசே எங்களிற்கு வழங்கவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ள இந்த விடயமும் மிகவும் பாரதூரமானது
இதற்கும் உடனடியாக தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் சுகாதார அமைச்சிடமேயுள்ளது.

நாடு அச்சுறுத்தும் நோயின் பிடியில் சிக்கியுள்ளது என்பதை கருத்தில் கொண்டு சைட்டம் விவகாரத்தில் காணப்படும் மனக்கசப்புகளை தூக்கியெறிந்து விட்டு உண்மையான மக்கள் சேவர்கள் போல் செயற்படுவது நல்லாட்சி அரசாங்கத்திற்கும் அதன் அமைச்சர்களுக்கும் முக்கியமானது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]