குழந்தை பெற இனி அதற்கு அவசியமே இல்லையாம்???

உடலுறவு வைத்துக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதற்கான முக்கிய காரணம் குழந்தை தான். வருங்கால சந்ததிகளின் தேவை ஒரு குடும்பத்திற்கு முக்கிய தேவையாக இருக்கிறது. நாம் மீதி இருக்கும் வாழ்க்கையை ஒரு பிடிப்புடன் வாழ குழந்தைகள் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

தனது வருங்கால வாரிசை வயிற்றில் சுமக்கும் ஒரு பெண்ணை அந்த குடும்பமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடும். தாய்மை தான் ஒரு பெண்ணை முழுமையடைய செய்கிறது.

குழந்தை பெற

ஆனால் இன்னும் முப்பது வருடங்களில் குழந்தைகளை பெற்றெடுக்க உடலுறவே தேவையில்லை. தாய் தனது வயிற்றில் குழந்தையை சுமக்கவே தேவையில்லை என்று கூறினால் எப்படி இருக்கும். இது சாத்தியம் என கூறுகிறார் ஸ்டேன்ட்போர்டு யுனிவர்சிட்டியை சேர்ந்த க்ரீலி.

ஆராய்ச்சியாளரான க்ரீலி, இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் குழந்தைகளுக்காக உடலுறவு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், குழந்தைகளை லேப்களிலேயே வளர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வேண்டிய கருவை பெற்றோர்களே தேர்வு செய்து கொள்ளலாமாம்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் பல நோய் தொற்றுகளில் இருந்து தப்பிக்க முடியுமாம். இது மலிவானதாகவும், நோய்களை தடுப்பதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த கண்டுபிடிப்பு எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வி நமக்குள் இருக்கும். இது சாத்தியம் தானாம்..! பெண்ணின் தோல் மாதிரியிலிருந்து ஸ்டேம் செல்களை உருவாக்குகின்றனர். பின்னர் இதிலிருந்து கருமுட்டைகளை உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகிறது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட கருமுட்டையினுள் ஆண்களின் விந்தணுக்களை செலுத்துவதன் மூலம் கருவை வளர வைக்க முடியுமாம். இவை அனைத்தும் ஆய்வு கூடங்களிலேயே நடைபெறும் ஒரு செயலாகும்.

இந்த முறையினை சாத்தியப்படுத்துவதால், மனிதர்கள் பலவிதமான நோய்களில் இருந்து விடுபட முடிகிறது. மேலும் தனது குழந்தையின் முடி எந்த நிறத்தில் இருக்க வேண்டும், குழந்தையின் கண்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பதையும் பெற்றோர்களே தேர்வு செய்து கொள்ள முடியுமாம்.

கணவன் மனைவிக்குள் ஏற்கனவே சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. இதில் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என்று தேர்வு செய்ய வேண்டிய அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தால், கணவன் மனைவி இருவரும் அடித்துக்கொள்ள இதை விட சிறந்த காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?

குழந்தை பெற

இதற்கு இனி எத்தனை கோடிகள் செலவாகும் என நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் ஆய்வாளர் க்ரீலி நாம் உடலுறவு சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு செலவு செய்யும் தொகையை விட இதற்காக செலவு செய்யும் தொகை மிக குறைவு தான் என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]