இனி வெல்வது மட்டுமே ஓரே வழி, கமல்ஹாசன் பேச்சு!

கமல்ஹாசன்

இனி வெல்வது மட்டுமே ஓரே வழி, கமல்ஹாசன் பேச்சு!

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். மற்ற கட்சியில் உள்ள தொண்டர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

நேற்றும் கூட புதுவையை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பிரதீப் குமார் தலைமையிலும் பூவை ஜெகதீஷ்குமார் அவர்களின் ஏற்பாட்டில் உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் அன்பையும் நேர்மையும் தேடி வந்துள்ளீர்கள், நானும் அதை தான் தேடி கொண்டிருந்தேன். அதனால் தான் நாமும் இணைத்துள்ளோம். எனக்கு வழி சொன்னவர்கள் நீங்கள் தான். இனி நடப்பதெல்லாம் செயலாக இருக்க வேண்டும்.

இந்த கூட்டம் வெறும் ஊர்வலம் செல்வதற்காக அல்லாமல் நமக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க அரசாங்கத்தை தூண்டுவது அல்லது அரசையே அமைப்பதாக இருக்க வேண்டும். உங்களை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கூடுகிறது. இனி வெல்வது மட்டும் தான் ஒரே வழி என உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.

கமல்ஹாசன் கமல்ஹாசன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]