இனி குத்தாட்டம் போட மாட்டேன்: கேத்தரின் தெரசா

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருபவர் கேத்தரின் தெரசா. சமீபத்தில் ஆர்யாவுக்கு ஜோடி சேர்ந்து ‘கடம்பன்’ படத்தில் நடித்தார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார். என்றாலும் 2-வது நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்பு வருகிறது. இது தவிர படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார். அடுத்து பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் நாயகனாக நடிக்கும் ‘ஜெய ஜானகி நயகா’ படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட சம்மதித்து இருக்கிறார். இதற்கு சம்பளம் ரூ.60 லட்சம் என்று கூறப்படுகிறது.

இது பற்றி கேத்தரின் தெரசா கூறுகையில், “இந்த படத்தை இயக்கும் போயப்பட்டி சீனு கேட்டுக்கொண்டதால் இதில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறேன். அவருக்காகத்தான் இதற்கு ஒப்புக்கொண்டேன்.

இதுவே கடைசி. இனி குத்தாட்டம் போட மாட்டேன். அவர் ‘சரைநோடு’ என்ற தெலுங்கு படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். எனவே ஒரு பாட்டுக்கு ஆட ஒப்புக் கொண்டேன். இனி அழுத்தமான வேடங்களில் மட்டும் தான் நடிப்பேன்” என்கிறார்.