இனிவரும் காலங்களில் நாடாளுமன்றைக் கலைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ மாட்டேன் – ஐதேமுவிடம் மைத்திரி உறுதிமொழி

நாடாளுமன்றத்தைக் கலைத்து கடந்த மாதம் 9ஆம் திகதி வெளியிட்ட, சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பை மீளப்பெறப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனிவரும் காலங்களில் நாடாளுமன்றைக் கலைக்கவோ அல்லது ஒத்திவைக்கவோ மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார். அவர் தனது கீச்சகத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக மீளவும் நியமிக்கமாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய தேசிய முன்னணியில் வேறொரு நாடாளுமன்ற உறுப்பினரை பிரதமர் பதவிக்கு முன்மொழியுமாறும் கேட்டுக்கொண்டார். அதனால் ஜனாதிபதிக்கும் ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது.

தற்போதைய அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் புதிய முன்மொழிவுகளுடன் ஐக்கிய தேசிய முன்னணி நாளை ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியைச் சந்திக்கும்” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இனிவரும்

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர் மனோ கணேசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]