இனியாவது நாட்டை பற்றி நினையுங்கள் – சஜித் பிரேமதாஸ

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணானது என உயர்நீதிமன்றம் சற்று முன்னர்  தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்றத்தின் தீர்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, உயர் நீதிமன்றின் இத் தீர்ப்புக்கு ஜனாதிபதி மதிப்பளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஜனநாயகம் உறுதியானது எனவும் அரசியலமைப்பு பலமானது எனவும், இனியும் ஜனாதிபதி தேவையற்ற ஆலோசனைகளை கேட்டு செயற்படாமல் நாட்டை பற்றி நினையுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பின் வெற்றியை நாங்கள் அமைதியாக கொண்டாட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோல் விடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]