இனவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது : சு.க. திட்டவட்டம்

இனவாதம் தலைத்தூக்க இடமளிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மீன்வள அமைச்சரும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறினார்.

இனவாதம்

நாட்டில் சில இடங்களில் இனவாத, மதவாதச் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று மூன்று தரப்பிலும் இனவாதிகள் உள்ளனர்.

சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் அடிப்படைவாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். அதேபோல் சிங்கள அடிப்படைவாதிகளும் உள்ளனர். நாடாளுமன்றத்திலும் உள்ளனர். முஸ்லிம் அடிப்படை வாதிகளும் உள்ளனர்.

இனவாதச் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன, மத, கட்சி என்ற பேதம் பாராது அனைவரும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸாருக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]