இனவாதத்தை தூண்டுவது மதகுருவாக இருந்தாலும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் : ரிஷாட் சபையில் ஆவேசம்

இனவாதத்தை தூண்டுவது மதகுருவாக இருந்தாலும் சட்டம் நிலைநாட்டப்பட வேண்டும் என்று கைத்தொழில் வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொண்டுவந்த இனக்குரோத செயற்பாடுகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தோம் என பெருமை பாராட்டிவரும் படையினர் உட்பட புலனாய்வு பிரிவினரால், முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்களை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நாட்டில் சிறந்த புலனாய்வுப் பிரிவினர் உள்ளனர் என்று நாம் பெருமை கொள்கிறோமே.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவரும் பௌத்த துறவிகள் உள்ளிட்ட சிலரை கைதுசெய்யும் விடயத்தில் பொலிஸார் தமது கடமைகளில் இருந்து தவறியுள்ளனர் என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

நாட்டில் மீண்டுமொரு இரத்த ஆறு ஓடவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மதகுருக்களாக இருந்தாலும் அவர்களை கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]