இனவாதத்தை தூண்டும் முகப்புத்தக கணக்குகளை முடக்க வாக்குறுதி

பேஸ்புக் சமூக வலைதளத்தின் ஊடாக இனவாத, மதவாத அல்லது வெறுப்பு உணர்வுகளை தூண்டும் கருத்துகளை பதிவிடும் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவன அதிகாரிகள், அரசாங்கத்திடம் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளதுடன், அரசாங்கதத்தின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வாக்குறுதியை அவர்கள் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த வாரங்களில் கண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் பேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தியதை அடுத்து, இது தொடர்பில் அவர்கள் தமது நிறுவனத்துக்கு அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]