இனமுறுகலை நீக்கி ஒற்றுமையை நல்லாட்சி ஏற்படுத்தியுள்ளது

“இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையை இல்லாமல் செய்து ஒற்றுமையை ஏற்படுத்தி சுதந்திரமான, ஒற்றுமையான சமூகத்தை நல்லாட்சி மூலம் உருவாக்க முடிந்துள்ளது” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்த பிரதமர்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனங்களுக்கிடையில் அன்று பாரிய பிரச்சனைகள் காணப்பட்டன. முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பல பிரச்சனைகள் ஏற்பட்டன. அதேபோன்று மகாநாயக்க தேரர்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இன்று அனைவருக்கும் சுதந்திரம் கிடைத்துள்ளது.

நாங்கள் வெள்ளை வேனை அனுப்பவில்லை. கொழும்பை எடுத்துக் கொண்டால் எந்த நாளும் ஆர்ப்பாட்டம். ஆனால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. இந்த சுதந்திரம் கடந்த காலத்தில் காணப்படவில்லை. இன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்ற நிலமை காணப்படுகின்றது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]