இனப்பிரச்சினை தொடர்பிலான உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டும் – இரா.சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்டும் என்பதில் அமரர்எச்.எம்.மொஹமட் அன்று திடமாக நம்பியிருந்தார்.
 
சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என அவர் விரும்பியிருந்தார்.   இருப்பினும்  அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர்.
முன்ளாள் சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில்
இடம்றறது. இதில் உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவருடன் நெருக்கமாகவிருந்தவர்கள் நேர்மையாக நடந்துகொள்ளாது தீர்வொன்றை வழங்காது அவருடைய எதிர்பார்ப்புக்களை உடைத்தனர். எனவும் சுட்டிக்காட்டினார்.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியத்தை
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.