இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையில்தான் உள்ளது இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது என்பதை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி தேசிய ஸ{ஹதாக்கள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல்கள் படுகொலை நிகழ்வை நினைவு கூறும் 28ஆவது ஸ{ஹதாங்கள் தின பிரதான நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் பள்ளிவாசல்களில் படுகொலை செய்யப்பட்ட ஸ{ஹதாக்கள் தினத்தை எம்மால் என்றுமே மறக்க முடியாது.

இந்த கொடூர சம்பவம் இடம்பெற முன்னர் வடகிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக மாபெரும் அச்சுறுத்தல் இருந்து வருவதை நாங்கள் உணர்ந்தோம்.

ஆனால், இந்தளவு மோசமான – அகோரமான ஒரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் இவ்வாறு படுமோசமான ஒரு செயலைச் செய்யும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

ஸ{ஹதாக்கள் படுகொலைச் சம்பவம், அவர்கள் சிந்திய இரத்தம் என்பவற்றால் நாங்கள் மன ரீதியாகவும் பலமடைந்தோம். இங்கிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறான சூழலில் ஸ{ஹதாக்களின் சிந்திய இரத்த உணர்விலேயே உருவாக்கப்பட்டார்கள்.

எம்மை விரட்டியடிக்க முற்படுபவர்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்கு முன்பு நாங்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும், எமது பிரதேசத்தை முன்னேற்ற வேண்டும் என்ற உணர்விலேயே நாங்கள் வளர்ந்தோம். அச்சுறுத்தல்களுக்குப் பயந்து காத்தான்குடியை விட்டு வெளியேற பலர் தயாரானார்கள். அப்போது நாங்கள் யாரையும் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

மரணித்தாலும் இந்த மண்ணிலே தான் மரணிக்க வேண்டுமே தவிர யாரும் வெளியேற முடியாது என கூறினோம். எனது இத்தீர்மானம் சமூக ரீதியாக எனக்கு ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

எனினும், நாங்கள் அன்று ஊரை விட்டு போக அனுமதித்திருந்தால் இன்று கத்தான்குடி என்ற மண் இருந்திருக்காது. எவ்வாறு வடக்கில் முஸ்லிம் பிரதேசங்களை நாங்கள் இழந்தோமோ அது போன்று கிழக்கிலும் இழந்திருப்போம்.

அன்று ஆயுத ரீதியான பங்கரவாதத்தை நாங்கள் முகம்கொடுத்தோம். இன்று அரச அதிகாரிகளின் பயங்கரவாதத்துக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. முஸ்லிம்களின் பூர்வீக காணிகளில் அவர்களை குடியேற்ற முடியாத அளவுக்கு தடையாக அரச அதிகாரிகள் செயற்படுகின்றனர்.

இனப்பிரச்சினைக்கான இனப்பிரச்சினைக்கான

தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாக வட கிழக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். மாறாக முஸ்லிம்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் ஒழித்து விட்டு அம்மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த விடயத்தில் தமிழ் தலைமைகள் மிகத்தெளிவாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதாக இருந்தால் முஸ்லிம்களை தமிழ் மக்கள் கௌரவிக்க வேண்டும். முஸ்லிம்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கும் தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்.

மாறாக தமிழ் தலைமைகள் தமது அரசியல் சுயலாபங்களுக்காக தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், கோஷங்கள், விமர்சனங்களை முன்வைக்கின்ற போது ஒரு போதும் வடகிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

தமிழ் – முஸ்லிம் மக்கள் இந்த மண்ணிலே நிம்மதியோடு – அரசியல் தீர்வு பெற்று வாழ வேண்டுமாக இருந்தால் முஸ்லிம்களின் அடிப்படைத் தேவைகள், அரசியல் உரிமைகளை மதிக்கின்ற சமூகமாக தமிழ் சமூகம் மாற வேண்டும். – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]