இனங்களுக்கிடையிலான சகவாழ்வை வலியுறுத்தும் வகையில் அரச நத்தார் தின தேசிய நிகழ்வு

இனங்களுக்கிடையிலான சகவாழ்வை வலியுறுத்தும் வகையில் இம்முறை அரச நத்தார் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (16.12.2017) கொண்டாடப்படவுள்ளதாக கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த நத்தார் தின தேசிய நிகழ்வுகளில் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோஹ்ன் அமரதுங்க, அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]