இந்த 6 ராசியினருக்கும் தலைவராகும் தகுதி இல்லையாம் – உங்க ராசி இதுல இருக்கா?

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்

தலைமை பொறுப்பிற்கு தகுதியில்லாத ராசிகளில் முதலிடத்தில் இருப்பது மிதுன ராசியாகும். உலகப்புகழ் பெற்ற வல்லரசு நாட்டின் தலைவர் இந்த ராசியில் பிராண்டவர்தான். இவர்கள் சிந்தனைமிக்கவர்களாக இருந்தாலும் இவர்களின் பாதுகாப்பற்ற உணர்வும், நம்பிக்கையின்மையும் இவர்களை தலைவராக இருக்க தகுதி இல்லாதவர்களாக மாற்றுகிறது.

ஒருவேளை இவர்களுக்கு கீழ் சிம்மம் அல்லது தனுசு ராசிக்காரர்கள் இருந்தால் அவர்களுக்குள் அதிக ஈகோ பிரச்சினைக்ளை ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மொத்தத்தில் இவர்கள் தலைமையில் இருக்க தகுதியற்றவர் என்று ஜோதிடம் கூறுகிறது.

கடகம்

இவர்கள் தங்களால் வழிநடத்த முடியாது என்பதை தைரியமாக ஒப்புக்கொள்வார்கள். இவர்கள் எப்பொழுதும் பிறரின் உழைப்பில் வாழ விரும்புவார்கள். வாய் நிறைய மாற்றங்களை பற்றி பேசினாலும் தானாக இறங்கி மாற்றத்தை கொண்டுவர இவர்கள் முயலமாட்டார்கள். அதனை மற்றவர்கள்தான் கொண்டு வரவேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்கள் வேலை செய்வதை பார்ப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். இவர்கள் சிறந்த தலைவர்கள் அல்ல ஆனால் சிறந்த பின்பற்றுபவராக இருப்பார்கள்.

விருச்சிகம்

இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு கட்டளைகள் இடுவதிலேயே ஆர்வமாக இருப்பார்கள், உண்மையான தலைமை பொறுப்பு என்பது இவர்களுக்கு கடினமான ஒன்றாகும். தலைமை பொறுப்பில் இருப்பதால் ஏற்படும் ஈகோ பிரச்சினைகளை இவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் அனைத்து செயல்களையும் தலைவர்கள் போல செய்வார்கள் சொல்லப்போனால் நன்றாகவே செய்வார்கள்.

ஆனால் ஒட்டுமொத்த தலைவராக செயல்படுவது என்பது இவர்களுக்கு கடினமாகும். இவர்கள் எப்பொழுதும் தனியாக செயல்பட விரும்புவார்கள், மற்றவர்களின் குறுக்கீடு இல்லாத பட்சத்தில் இவர்கள் நல்ல தலைவராக செயல்பட வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் ஒரு செயலை தலைமையேற்று நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும். இவர்கள் பொதுவாக தலைமை பொறுப்பை விரும்ப மாட்டார்கள் ஆனால் எப்பொழுதும் தன்னை தலைமை பொறுப்பில் வைத்து கனவு காண்பார்கள். இவர்களுக்கு தலைமை பண்பை விட கோபம்தான் அதிகமாக இருக்கும். இவர்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்வதோடு சுயவிளம்பரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இவர்களுக்கு மற்றவர்களை வழிநடத்தும் பொறுமையோ, சமநிலை தன்மையோ இருக்காது.

கும்பம்

தலைமை குணம் இல்லாத அடுத்த ராசி இதுவாகும். இவர்களுக்கு தலைமை இடத்திற்கு வரவேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் அதிகம் இருக்கும், ஆனால் அது மட்டும் தலைவராய் இருக்க போததல்லவா?. ஒருவேளை நீங்கள் கும்ப ராசி தலைவருக்கு கீழே வேலை செய்ய நேர்ந்தால் சலிப்பான மற்றும் உத்வேகம் இல்லாத வேலைக்கு தயாராகி கொள்ளுங்கள்.

ஒரு வேலையை திட்டமிடும் மற்றும் ஏற்பாடு செய்யும் திறமை இவர்களுக்கு உள்ளது ஆனால் அதனை வழிநடத்தும் திறமை இவர்களுக்கு இருக்காது. இவர்கள் வெற்றிக்கு பின்புறம் இருக்க மட்டுமே சரியானவர்கள் தலைவரை இருந்து அதனை பெற்றுத்தர இவர்களால் இயலாது.

மீனம்

எப்பொழுதும் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீரில் மிதக்கும் மீன ராசிக்கார்களை தலைவராக தேர்ந்தெடுக்கும் முன் நன்றாக சிந்திக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இவர்களின் தலைமை பண்பு மீது இவர்களுக்கே எப்பொழுதும் சந்தேகம் இருக்கும். குறிப்பாக அரசியலில் தலைமைப்பண்பு இவர்களுக்கு முற்றிலும் ஒத்துவராத ஒன்று. இவர்கள் சொல்வதை அப்படியே கேட்கும் அடிமைகளுக்கு வேண்டுமென்றால் இவர்கள் தலைவராக இருக்கலாம், மற்றவர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]